சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய டீக்கடைக்காரர் : கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை செய்து அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 6:17 pm

சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய டீக்கடைக்காரர் : கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை செய்து அசத்தல்!!

பிரபல நடிகர்களின் பிறந்தநாள் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்களும் ஆதரவாளர்களும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் 64 ஆவது பிறந்த நாளை டீக்கடைக்காரர் ஒருவர் கொண்டாடி இருக்கிறார். ஈரோடு அகில்மேடு வீதியில் பிரியா டீ ஸ்டால் டீக்கடை நடத்தி வருபவர் குமார். இவர் நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை டீக்கடை குமார் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அதில் வருடம் தோறும் கொண்டாடுவது போல் இன்றி இந்த ஆண்டு கர்ப்பிணிமார்களை அழைத்து அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கியதோடு கேக் வெட்டியும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார். கவர்ச்சி நடிகை என்றும் பாராமல் சில்க் ஸ்மிதாவுக்கு டீக்கடைக்காரர் பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு இணையவாசிகள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்