பாடத்தில் டவுட் கேட்ட 12ஆம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan18 September 2024, 11:45 am
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசுமேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியரை உறவினர் தாக்கிய வீடியோ வைரலானது.
மேலும் படிக்க: கேரளாவை அலற விடும் நிபா வைரஸ்… கோவையை சுற்றி சுகாதாரத்துறை தீவிர சோதனை!!
இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி திரு.. அஸ்ராகர்க், வேலூர் சரக டிஐஜி எஸ்பி பிரபாகரன், உத்திரவுப்படி, டிஎஸ்பி மனோகரன் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தேவி சப் இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சிவக்குமார் கொண்ட குழுவினர் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் மறைந்திருந்த ஆசிரியர் தனக்கரசை பள்ளி மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்து 11 (1) 12 போக்சோ சட்டத்தில் கைது செய்துதனர்.
பின்னர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரை தாக்கிய 18 வயதுக்கு மேற்பட்ட கோகுல், மனோஜ் ,, செல்வராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.