தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம் பெற்றவரான இவர் பொம்மிடி அருகே உள்ள பத்திரி ரெட்டி ஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி தணிகைகேஸ்வரி 40 இவரும் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார், இவர்களுக்கு தீபன், ரித்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
வழக்கமாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் அவரிடம் இருந்து போன் எதுவும் வராததால் வீட்டில் சென்று பார்க்குமாறு இவரது மனைவி தணிகைகேஸ்வரி கணவரின் தம்பி பீட்டரிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவர் உறவினர்களும் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு கிடந்தது. பிறகு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஆசிரியர் அருண்பிரசாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இது குறித்து தாகவல் அறிந்த பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர்.
அப்போது ஆசிரியர் அருண்பிரசாத் 12 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவர் தனது மரணத்திற்கு தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியை சார்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி ஜெயா 45 வயது ஆகியோர் தான் என் இறப்பு காரணம், இவர்களிடம் வீடுக்கட்ட இடம் வாங்கி வீடு கட்டினேன், அதன் அருகே மேலும் இடம் உள்ளதாகவும் அதனையும் வாங்கிகொள்ள வற்புறுத்தினர்.
இதனால் தனது மனைவி நகை அனைத்தும் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அந்த நிலத்தை எழுதிகொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பணத்தை திருப்பி கேட்டேன் இதற்கு என் கும்பத்தையும், எனது நண்பர் குடும்த்தினருக்கும் பல்வேறு இடையூர் செய்தனர்.
பொய் வழக்கு போட்டு எனது நண்பரை சிறைக்கு அனுப்பினர். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டேன் என எழுதி இருந்தார்.
இது போல் கடந்த இருதினங்களுக்கு முன் தருமபுரியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெடர்ந்து நேற்று பொம்மிடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.