என்னடா STYLE ம***று.. போட்டியில் தோற்ற மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த ஆசிரியர்.. பாய்ந்த நடவடிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 6:19 pm

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனை செல்போனில் வீடியோவாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி