ஊசியால் பள்ளி மாணவனின் முகப்பருவை நீக்கிய ஆசிரியை? முகம் வீங்கி பலியான மாணவன் : பெற்றோர்கள் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 6:58 pm

திருவண்ணாமலை : முகப்பரு பிரச்சனையால் பள்ளி மாணவன் முகம் வீங்கி உயிரிழந்த நிலையில் ஆசிரியர்தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த சேவத்தான் – செல்லம்மாள் தம்பதியினருக்கு சுதா, அஜித், சிவகாசி, அசோக், சுஹாசினி என 5 குழந்தைகள் உள்ளனர்

இதில் 3வது பிள்ளையான சிவகாசி அங்குள்ள ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட் அரசவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரசு விடுதியில் தங்கி படித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதியன்று அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தொலைபேசி மூலம் சிவகாசியின் தந்தை செவத்தானை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிவகாசியின் முகம் வீங்கி உள்ளதாகவும் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, செவத்தான் தனது மகன் சிவகாசியை நம்பியந்தல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

சிவகாசிக்கு முதலுவதவி செய்த மருத்துவர்கள், அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாணவனின் உடல்நிலை மோசமானதால் வேலூர் சிஎம்சிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில், தன் மகன் இறப்பிற்கு ஆசிரியை முகப்பரு ஊசியை வைத்து சுத்தம் செய்தேதே காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவனுக்கு முகத்தல் சூடு கட்டி வந்ததாவும், நான் துடைத்துதான் விட்டேன், பிறகு அவன் முகம் வீங்கியதால் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தேன் என ஆசிரியர் கூறியுள்ளார்.

ஜவ்வாது மலையில் நடக்கும் அவலங்களை சுட்டுக்காட்டுபவர் என்பதால் அரசியல்வாதிகளுக்கு எனனை பிடிப்பதில்லை அதனால் என்னை பழிவாங்க இப்படியொடு குற்றச்சாட்டை வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

ஆசிரியை மகாலட்சுமி மலைவாழ் பள்ளியில் சிறந்த சீர்திருத்தங்களை செய்து சிறந்த சேவை செய்வதாக அரசின் சார்பில் பல விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 1203

    0

    0