போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்… சமாதானப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 9:11 am

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அதையேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் நாளை (ஜூலை 25) நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஒரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமேபங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி