திருச்சி மாவட்டம், திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651-ற்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து, சமூக வலைத்தளங்களை சோதனை செய்த போது திருச்சி மாவட்டம், குண்டூர், வடக்கு தெருவை சேர்ந்த குமரகுரு என்பவரது மகன் சச்சின்(18) என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்படி மாத்தூர் பகுதியில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றும், அதனை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் என தெரிய வந்தது.
இது குறித்து, மேற்படி நபர் மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சச்சினை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின உதவி 9487464651 என்ற கேட்டு கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.