கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பரவிய பயங்கர தீ… 2 நாள் போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் வந்தது..!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 12:50 pm

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீ கடும் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் சேகாரமாகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

இங்கு வெயில் காலங்களில் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இந்நிலையில் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்தது.

இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 40 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் டன் கணக்கில் குப்பைகள் எரிந்து சாம்பலானது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி பொக்லையின் இயந்திர உதவியுடன் குப்பைகளை கிளறி தீயணைக்கப்பட்டது.

தீப்பிடிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. குப்பையில் மீத்தேன் வாய்வு உற்பத்தியாகி தானாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளால் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ