செயின் பறித்த திருடர்களுக்கு உடனே தண்டனை : பைக்கில் மாயமான இளைஞர்கள் சடலமாக மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 8:02 pm

பொள்ளாச்சி கடைவீதியில் நேற்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.

திடீரென செயின் பறித்ததில் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார், அப்பகுதி வியாபாரிகள் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் தப்பிச் சென்ற மர்மநபர்கள் பைக்கை வேகமாக இயக்கி சென்றுள்ளனர் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்சய் குமார் மற்றும் அவரின் நண்பர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?