ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்த குண்டர் சட்டம்…! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Author: kavin kumar
16 February 2022, 9:36 pm

கோவை: டிக் டாக் புகழ் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டிக் டாக் மூலம் பிரபலமானவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா இவரும் இவரது நண்பருமான சிக்கந்தர் என்ற சிக்கா என்பவரும் சேர்ந்து கோவையை சேர்ந்த யுடியூப் சேனல் நடத்தும் பெண்மணி குறித்த ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் டிக் டாக் சூர்யா மற்றும் சிக்கா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற நிலையிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இதனிடையே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1524

    0

    1