விளையாடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்.. எமன் வடிவில் வந்த மழை.. மதுரையில் பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 2:35 pm

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முசுண்டகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவமணி – கவிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவது மகன் பெரிய கருப்பு வயது (13) பெரிய கருப்பு.

இவர் தற்போது கோடை விடுமுறை என்பதால் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மின் கம்பத்திலிருந்து அங்குள்ள ஊராட்சி மின்மோட்டார் அறைக்கு மின் ஒயர் கொண்டு செல்ல வயர் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பியில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத சிறுவன் பெரிய கருப்பு விளையாடிக் கொண்டிருந்த போது எதர்ச்சியாக தொட்ட போது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்துள்ளார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்ததை தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: நீட் தேர்வு ரத்து செய்யுங்க… திமுக ஏன் எதிர்க்குது இப்ப புரியுதா?இதுதான் சாட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 351

    0

    0