கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மனோஜ் (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்தார்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பரது மகள் ஆர்த்தி (வயது 19) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே சென்ற போது முன்னாள் சென்ற 56-எண் அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்தது.
இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.