காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 7:56 pm

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சரவணக்குமார் கூலி தொழிலாளியான இவர் பட்டியல் சாதியினை சார்ந்தவர். இவரது மகள் ஹரிணி (வயது 20) இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவருக்கும் பக்கத்துவீட்டை சார்ந்த ராகுல் காந்தி என்ற ராபிக்கும் காதல் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசை வார்த்தை கூறி ஹரிணி-யை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் ஹரிணி இருமுறை கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்துள்ளார். தற்போது ஹரிணி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ராபி ஹரிணி வெவ்வேறு ஜாதி என்பதால் மாணவியை ராபி திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி ஹரிணி வீட்டில் வைத்து விஷமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் பாதிப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும், இழப்பீடு வேண்டும் என உடற் ஆய்வு செய்யப்பட்ட உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கை நிறைவேற இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என உறவினர் கூறுகின்றனர்

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 400

    0

    0