அயோத்திக்கு புறப்பட இருந்த ரயில்.. ராமர் புகழை பாடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி வழியனுப்பி அசத்திய குழு!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2024, 9:05 pm
அயோத்திக்கு புறப்பட இருந்த ரயில்.. ராமர் புகழை பாடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி வழியனுப்பி அசத்திய குழு!
கோவையில் இருந்து அயோத்திக்கு நேற்று நான்காவது சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏற்கனவே எட்டாம் தேதி 13-ஆம் தேதி 18ஆம் தேதி என மூன்று சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்பட்ட நிலையில் நேற்று நான்காவது சிறப்பு ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
சுமார் 20 செகண்ட் கிளாஸ் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கோவை நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு சென்றனர்.. கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரவு இந்த ரயில் புறப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தில் அயோத்திக்கு புறப்பட இருந்த ரயிலை ராமர் புகழை பாடி வள்ளிகும்மி ஆட்டத்துடன் வழியனுப்பி அசத்திய குழு#Coimbatore | #Ayothi | #RamarTemple | #RailwayStation | #Devotees pic.twitter.com/pbGnVKG7vx
— UpdateNews360Tamil (@updatenewstamil) February 24, 2024
முன்னதாக ரயில் நிலையத்தில் வள்ளி கும்மி குழுவினர், அயோத்தி ராமர் அவர்களின் பெருமைகளை பாடி வள்ளி கும்மி நடனம் ஆடினார். இது அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் ஆரவாரத்தை பெற்றது.