காதலிப்பதாக கூறி சீரழித்த அரசியல் பிரமுகர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. கலெக்டர் ஆபீஸில் கதறும் இளம்பெண்..!

Author: Vignesh
17 July 2024, 4:21 pm

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இளம் பெண் ஒருவர் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும், பல இடங்களில் ஊர் சுற்றியபோது ஓட்டலில் தனிமையில் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ் உடன் நெருக்கமாக பழகியதில், தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் தன்னை அழைத்து கர்ப்பத்தை கலைத்துவிட்டால் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாக நம்பிக்கை கர்ப்பத்தை கலைத்து விட்ட நிலையில், விக்னேஷின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். தற்போது, வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விக்னேஷுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும், தற்போது தன்னை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு அழைத்து மிரட்டுவதாகும். இல்லாவிட்டால் தாங்கள் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். எனவே தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் சினேகா கேட்டுக் கொண்டுள்ளார்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!