‘போ.. இங்கே வராதே…திரும்பி காட்டுக்குள்ளே போ’: சொன்னபடி கேட்டு திரும்பி சென்ற பாம்பு..!!(வீடியோ)

Author: Rajesh
28 January 2022, 4:41 pm

கோவை: கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கண்ணாடி விரியன் பாம்பிடம் ‘வராதே, திரும்பி போ’ என கட்டளையிட அதனை கேட்டு அப்படியே திரும்பி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

கோவையில் பாம்பு ஒன்று ஒருவரின் சொல்பேச்சு கேட்டு வீட்டுக்குள் வராமல் சென்றுள்ளது ஆச்சரியமடைய செய்துள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையம், லட்சுமி நகரில் வசிப்பவர் கனகராஜ்.

எலக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவரது வீட்டின் வாசலில் நேற்று மாலை 6 மணியளவில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதனை கவனித்த கனகராஜ், பாம்பிடம் ‘போ.. இங்கே வராதே.. திரும்பி காட்டுக்குள்ளே போ..’ என கட்டளையிட அதனை கேட்ட அப்பாம்பு, திரும்பி சென்றுள்ளது.

https://vimeo.com/671097447

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அங்கிருந்து சென்ற பாம்பு அருகில் இருந்த பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த கோவை வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!