நடுரோட்டில் மயங்கி விழுந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. கடவுள் போல வந்த காவலர் : கண் கலங்க வைத்த VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 6:02 pm

நடுரோட்டில் மயங்கி விழுந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. கடவுள் போல வந்த காவலர் : கண் கலங்க வைத்த VIDEO!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்க கூடிய மறவன்குளம் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் பார்வையற்ற பேனா வியாபாரி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பார்வையற்ற பேனா விற்பனை செய்து வரும் மாற்றுத்திறனாளி சாலையின் ஓரத்தில் நடந்து வந்து போது திடீரென அவருக்கு வலிப்பு வரவே செய்வதறியாது சாலை நடுவே வந்து 3 முறை சுற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் சாலையில் நடுவே விழுந்து துடித்துடிக்கவே மயக்கம் அடைந்து சாலையின் நடுவே விழுந்து கிடந்தார்.

மேலும்., அவர் சாலையில் விழும் அந்நேரத்தில் எவ்வித கனரக மற்றும் நான்கு சக்கர வாகனமும் அவர் மீது மோதாமல் இருந்தது.

தொடர்ந்து., அவருக்கு வலிப்பு வரவே அங்கிருந்த வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சாலையில் கடந்து சென்றனர். தொடர்ந்து., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவ்வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த காவல் சார்பு ஆய்வாளர் பார்வையற்ற மாற்றுத்திரனாளியை அங்கிருந்து மீட்டு சென்று முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது வலிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே மயங்கி கிடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவரின் மனதை கலங்க வைத்துள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!