புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை சுவர் அடியோடு விழுந்த அவலம்.. 3 மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்கல : பெரும் விபத்து தவிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2022, 1:35 pm
மூன்று மணி நேர பலத்த மழையின் காரணமாக திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது இரவு நேரம் என்பதால் உயிர் பலி ஏற்படவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சி மையப் பகுதியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக திண்டுக்கல் நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வத்தலகுண்டு நிலக்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பத்து தாலுகாக்களில் உள்ள பொதுமக்கள் விபத்து மற்றும் மகப்பேறு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு வருவது வழக்கம்.
தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர் அதேபோல் மருத்துவக் கல்லூரி அருகே பள்ளிகள், வணிக வளாகங்கள், பூச்சந்தை, கோவில் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள மையப் பகுதியில் மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையின் காரணமாக மருத்துவமனை தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது தரம் இல்லாமலும் கம்பிகள் இல்லாமலும் சுற்றுச்சுவர் கட்டுவதாக அப்பொழுது பொதுமக்கள் புகார் எழுப்பினர்.
ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாதால் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது இந்நிலையில் நேற்று இரவு பெய்த 3 மணி நேர மழையின் காரணமாக சுற்றுச்சுவர் அடியோடு விழுந்துள்ளது.
பகல் நேரத்தில் விழுந்து இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை
0
0