கேரளாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது…. திருச்சியில் பரபரப்பு…

Author: kavin kumar
17 February 2022, 6:58 pm

திருச்சி : கேரள மாநிலத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்தனர். விமானத்தில் வந்த பயணிகளின் அதிகாரிகள் பாஸ்போர்ட்டை தணிக்கை செய்தனர்.

அப்போது கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டம், காசர்கோடு பகுதியை சேர்ந்த ஹீதாஸ் (27) என்பவரின் மீது கேரள மாநிலம் கண்ணனூரில் வழக்கு பதியப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்பட்ட குற்றவாளி என தெரியவந்தது.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஹீதாஸ் கைது செய்த காவல்துறையினர் அவரை விசாரித்த பின்னர் கண்ணனூர் காவல் துறையினரிடம்‌ ஒப்படைத்தனர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!