அலைக்கழிக்கும் கேரள அரசு.. கண்டுகொள்ளாத தமிழக அரசு : தவிக்கும் பக்தர்கள் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 9:37 pm

அலைக்கழிக்கும் கேரள அரசு.. கண்டுகொள்ளாத தமிழக அரசு : தவிக்கும் பக்தர்கள் : அண்ணாமலை வலியுறுத்தல்!

சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் பத்கர்கள் கூட்டம் அதிகரிப்பதால் தரிசனத்திற்கு 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதே போல பத்கர்களை போலீசார் காக்க வைக்கம் சூழலும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இஇது குறித்து அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ