ஓடிக் கொண்டிருந்த ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. பதற்றத்தில் தவித்த வாகன ஓட்டி : ஷாக் சிசிடிவி!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 2:24 pm

ஓடிக் கொண்டிருந்த ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. பதற்றத்தில் தவித்த வாகன ஓட்டி : ஷாக் சிசிடிவி!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட புல் புள்ளி பகுதியில், தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று சென்றுள்ளது.

நகரத்தில் நுழைந்தபோது ஜீப்பில் இருந்த டயர் திடீரென கழன்று, சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி சாலையில் விழுந்தது. டயர் உருண்டபோது வேறு எந்த வாகனமும் குறுக்கே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஜீப்பும் மெதுவாக சென்றதால் அதில் இருந்தவர்கள் நூலிழையில் உயிர்தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?