சாலையில் சென்ற அரசுப்பேருந்தில் கழன்று ஓடிய சக்கரம்…சமயோஜிதமாக செயல்பட்ட ஓட்டுநர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 1:22 pm
திருப்பூர் : அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியதால் ஓட்டுநர் நடத்துநரால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்த போக்குவரத்து கழக அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை கள்ளகிணறு அருகே திருநெல்வேலியில் இருந்து நாற்பத்தி ஏழு பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் முன் சக்கரம் திடீரென பேருந்தில் இருந்து கழன்று சாலையில் அரை மைல் தொலைவு வரை சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சேதம் அடைந்தது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பேருந்தின் ஓட்டுனர் காமராஜ் உடனடியாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து இழுத்து பேருந்தை நடுவழியில் நிறுத்தினார் .
பின்னர் நடத்துனர் சதிஷ்குமார் பயணிகள் அனைவரையும் பத்திரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றி சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார் .இதனை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் நடுவழியில் சிக்கித் தவித்த பயணிகள் 47 பேரையும் பல்லடம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்று பேருந்து மூலம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த விபத்தில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீர் செய்தனர் .
47 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தின் சக்கரம் திடீரென பேருந்தில் இருந்து கழன்று சாலையில் உருண்டு சென்ற நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பையும் ஓட்டுநருக்கு பாராட்டுக்களையும் குவித்துள்ளது.
0
0