தற்கொலை செய்ய கிணற்றில் குதிதத் மனைவி.. காப்பாற்ற சென்ற கணவர்.. தத்தளித்த தம்பதி : பரிதவித்த மகள்!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2024, 10:20 am
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குளத்துவாய்பட்டியில் வசித்து வருபவர் கண்ணன் (48), இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மனைவி கிருஷ்ணவேணி (46), தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோபித்துக் கொண்டு ஓடிய கிருஷ்ணவேணி அருகேயுள்ள நல்லப்ப நாயக்கர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், இவரை பின்தொடர்ந்து வந்த கணவர் கண்ணனும் கிணற்றுக்குள் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் கினற்றில் தத்தளித்த இருவரையும் தம்பதியரின் மகளான அபரணா தோட்டத்தில் கிடந்த கயிற்றை கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
அதனைப் பிடித்து தொங்கியவாரே மனைவியை காப்பாற்ற கண்ணன் போராடி வந்தார். இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் பத்திரமாக மீட்க கடுமையான போராட்டம் நடத்தவேண்டி வந்தனர்.
இதனையடுத்து, கிருஷ்ணவேணி தன்னை காப்பாற்ற வேண்டாம் என கூச்சலிட்டு நீண்ட நேரம் போராடினார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு கிருஷ்ணவேணியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.