நடைபயிற்சியில் ஈடுபட்டவரை ஓடஓட விரட்டிய காட்டு யானை : தடுமாறி விழுந்தவரை தாக்கிய யானை.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 6:02 pm

கோவை : வால்பாறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவரை யானை ஓட ஓட விரட்டி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில் சோலையார் எஸ்டேட்டை சேர்ந்த துரைராஜ் வயது 51. இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து வந்த காட்டு யானை அவரை தள்ளியது.

இதனால் அவர் படுகாயமடைந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரது அலற சத்தம் கேட்டு உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0