நள்ளிரவில் சாய்ந்த மின்கம்பம் : சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட வயர்மேன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 4:14 pm

நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். 46 வயதான மோகன்ராஜிற்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

நேற்று நள்ளிரவு அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது, சாலை விரிவாக்க பணிக்கு சென்ற ஆர்.ஆர் இன்ஃபிரா சொலுஷன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.

மின்வாரிய அலுவலகத்தில் நைட் டூட்டி செய்யும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். .

வயர்மேன் மோகன்ராஜ் மதுபானக் கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றி அவளூர் மார்கமாக செல்லும் லைனை இயக்க முயன்ற போது திடீரென மோகன்ராஜ் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் மின் கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைகண்டு அதிர்ச்சியுற்ற சக மின் ஊழியர்கள் வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தலைமை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மின் கம்பத்தில் ஏறி மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர்.

வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

நள்ளிரவு பணியின் போது மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 451

    0

    0