கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணாடி விரியன் பாம்புடன் வந்த பெண் : 4 வருடமாக மின் இணைப்பு தரவில்லை என புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 6:50 pm

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சமரச செல்வி. இவர் இன்று தனது பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் கையில் சுமார் 5 அடி நீளம் கொண்ட இறந்த நிலையில் உள்ள பாம்புடன் அலுவலகத்திற்குள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த காவல்துறையினர் விரைந்து சென்று பாம்பை அவர்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது சமரச செல்வி கூறுகையில் – தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச வீட்டிற்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு தரவில்லை. அவ்வப்போது பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது.

மின் இணைப்பு வழங்கப்படாததால் எனது மகளும் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று எங்களுடைய வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொன்று இன்று காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளோம் என்றார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!