‘உன்னை நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன்’ ; புகார் அளிக்க வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை மிரட்டிய பெண் போலீஸ்!!

Author: Babu Lakshmanan
19 December 2022, 12:03 pm

தூத்துக்குடி ; புகார் கொடுக்க வந்தவரை பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த நபரை பெண் போலீஸ் ஒருவர் மிரட்டி அனுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கந்தன். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிண அறை பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகளுக்கும், அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கமால் வாயிலில் வைத்து “ உன்னை நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன்” என்று கூறி மிரட்டும் தோனியில் பேசியது மட்டுமின்றி, நீதிமன்றம் சென்றால், கூட உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற என்ற பாணியில் பேசி உள்ளனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போலீசார் புகார் அளிக்கச் செல்லும் யாரையும் மரியாதையாக நடத்துவதில்வை , அவதூறாக பேசி வெளியே அனுப்பி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 394

    0

    0