கை, கால்கள் கட்டப்பட்டு பெண் எரித்துக் கொலை.. விசாரணையில் சிக்கிய முன்னாள் காதலன் : பின்னணியில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 10:33 am

கை, கால்கள் கட்டப்பட்டு பெண் எரித்துக் கொலை.. விசாரணையில் சிக்கிய முன்னாள் காதலன் : பின்னணியில் பயங்கரம்!

மதுரையை சேர்ந்த இளம்பெண் நந்தினி (28) சென்னையில் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார்.

பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில் கேளம்பாக்கம் அருகே நந்தினியை சங்கிலியால் கட்டி, கை, கால்களை அறுத்து எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய முன்னாள் காதலன் வெற்றியை, தாழம்பூர் போலீசார் கைது செய்தனர்.

காதலித்து ஏமாற்றியதால் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டுள்ளார்.

நந்தினி வேறொரு இளைஞரை காதலிப்பதை அறிந்ததால், திட்டம் போட்டு வெற்றி இந்த கொலையை செய்துள்ளார். கைதான வெற்றியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!