லிஃப்ட் கேட்ட பெண்… புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த நபர்.. மது அருந்தும் போது சிக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 11:07 am

திருச்சி அருகே லிப்ட் கேட்ட சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான பெண். இவருக்கும், இவருடைய இரண்டாவது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரெட்டிமாங்குடியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதான சுரேஷ் என்பவரிடம் சிறுகனூரில் இறக்கி விடச் சொல்லி அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சிறுகனூர் நோக்கி வந்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி முட்புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என சுரேஷ் மிரட்டி உள்ளார். இதனையடுத்து, சிறுகனூர் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண்ணை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த சிறுகனூர் போலீசார் மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சுரேசை பிடித்து கைது செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 557

    0

    0