வாங்காத லோனுக்கு வீடு தேடி வந்து பணம் கேட்குறாங்க… ஊரையே ஏமாற்றி எஸ்கேப் ஆன பெண் : பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 6:36 pm

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கம்பட்டி கிராமம் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்

இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த ராணி என்ற பெண் சொக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெண்களிடம் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவதாக கூறி ஆதார், ரேஷன் அட்டை , வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகளை வாங்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் உதவி பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடன் பெற்றுக் கொண்ட பெண்கள் தங்களது தவணைகளை வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் செலுத்தி வந்துள்ளனர்

இந்நிலையில் ராணி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதாக கூறி அவர்களுடைய ஆவணங்கள் முழுவதையும் பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரியாமலே வங்கி கடன் பெற்றுள்ளார் .

கடனுதவி வாங்கிய பின்னர் சம்மந்தபட்ட பெண்களை தொடர்பு கொண்டு தங்களது பெயரில் கடன் வாங்கி உள்ளேன் என கூறி வந்து கையெழுத்து விட்டு செல்லுங்கள் என கூறி கையெழுத்தை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு கடனுக்கும் ஆயிரம் ரூபாய் கமிஷன் காசாக கொடுத்துவந்துள்ளார்

ராணி மற்ற பெண்களின் பெயர்கள் பெற்ற கடன்களை நிதி நிறுவனத்திடம் பயனாளிகளுக்கு தெரியாமலே அவரது அட்டைகளை பயன்படுத்தி கட்டி வந்துள்ளார்

மேலும் ராணி, பல்வேறு தொழில்களை செய்வதாக கூறி அங்குள்ள பெண்களிடமிருந்து கடனாக ரொக்க பணமும் அவ்வப்போது நகைகளையும் வாங்கி அடகு வைத்து வந்துள்ளார்

ராணி அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்கு மேற்பட்ட பெண்களுடைய ஆதார் ரேஷன் கார்டு ஏடிஎம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வாங்கி வைத்துள்ளார்

இதன் காரணமாக அனைத்து ஆவணங்களையும் நிதி நிறுவனங்களில் கொடுத்துவிட்டு மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் பல்வேறு கடன்களை பெற்று வந்துள்ளார்.

மேலும் சில பெண்களுடைய பெயரில் கடன் உதவி பெறும்போது சம்பந்தமில்லாத நபர்களுடைய போட்டோவை ஒட்டி மோசடியாகவும் கடன் பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது

இதனிடையே ராணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தலைமறைவான நிலையில் சொக்கம்பட்டி கிராமத்திற்கு வந்த பல்வேறு நிதி நிறுவன ஊழியர்கள் அங்குள்ள பெண்களை சந்தித்து தங்களது பெயரில் ஏராளமான வங்கிக் கடன்கள் பெற்றுள்ளதாக கூறி தவணை முறையில் பணத்தை செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்

சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 60க்கு வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளிடம் தங்களது பெயரில் மூன்று முதல் நான்கு லோன்கள் வரை இருப்பதாகவும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றுள்ளதாகவும் எனவே கடனை தாங்கள் கட்ட வேண்டும் என நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மூதாட்டிகளிடம் கேட்பதால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டிகள் தங்களுக்கும் பணம் வாங்கியதுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய நிலையில் தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கட்டாயம் செலுத்த வேண்டும் என கூறுவதால் அச்சப்பட்டு சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிகளும் பெண்களும் பக்கத்து ஊர்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராணியை கைது செய்ய வேண்டும் எனவும் ராணிக்கு உடந்தையாக இருந்த நிதி நிறுவன ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று புகார் மனு அளித்தனர்.

மதுரை சொக்கம்பட்டியில் ஒட்டுமொத்த கிராமத்தையே நல்லது செய்வதாக கூறிய ராணி மூதாட்டிகள் முதல் இளம் பெண்கள் வரை அத்தனை பெயர்களிலும் இலட்சக்கணக்கில் கடன் வாங்கி விட்டு டிமிக்கி கொடுத்துவிட்டு கில்லாடி ராணியாக எஸ்கேப் ஆகியதால் பெண்கள் சொல்ல முடியாத வேதனையில் கண்ணீர்மல்க கதறி அழுதனர்.

இது தொடர்பாக பேசிய பெண்கள் ராணி தங்களது உறவினர் தான் எனவும் ஆனால் தங்களுக்கு உதவிகளை செய்வதாக கூறி எங்களது ஆவணங்கள் அனைத்தையும் வீட்டிற்குள் வைத்துக் கொண்டு எங்களது பெயரில் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடியாக வங்கி கடன் பெற்று விட்டு தற்போது தலைமறைவாகிவிட்டார் எனவும்,

இதனால் தாங்கள் எந்தவித கடனும் பெறாமல் வங்கி மற்றும் நிதி நிறுவன ஊழியர்களுக்கு பதிலளிக்கக்கூடிய நிலை உள்ளதாகவும் நாள்தோறும் நிதி நிறுவன ஊழியர்கள் கிராமங்களுக்கு வந்து பணத்தை கட்ட கோரி அவதூறாக பேசுவதாகவும் இதனால் தங்களால் ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

இது தொடர்பாக பேசிய மூதாட்டி நெஞ்சுக்குலை எல்லாம் பதறுது சாப்பிடுவதற்கு கூட காசு இல்லாத தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டதாக கூறி ஆபிஸர்ஸ் கேட்கிறார்கள் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 356

    0

    0