மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 12:17 pm

மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பாலகங்காதரதிலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் திருவிழாவில் கடைகளில் பொருட்கள் விற்பவர்.

இவரது மனைவி கீதா (வயது 54) இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கீதா குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

கீதாவிற்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அடிக்கடி டாஸ்மாக் மது கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி குடித்துவிட்டு போதையில் எங்கேயாவது தூங்கிவிட்டு ஒரு நாள் கழித்து வீட்டிற்கு வருவதுண்டாம்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

அந்தத் தொகையை வீட்டில் உள்ளவர்களிடம் வியாழக்கிழமை வற்புறுத்தி வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

கீதா வழக்கம் போல் எங்காவது குடித்துவிட்டு கையில் இருந்த பணம் செலவான பின்னர் வீடு திரும்புவார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் மதியம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி சாமியார்மலை அருகே உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சற்று தொலைவில் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து கிடந்தது கீதா என தெரிய வந்தது. கையில் இருந்த பணத்திற்கு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி அங்கேயே நேற்று முன்தினத்தில் இருந்து குடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து போலீசார் கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சிறுமி கொலை? தலையில்லாமல் எரிந்து கிடந்த எலும்புக்கூடு : ஆடு மேய்க்க சென்றவர்கள் அதிர்ச்சி!

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்றுக்கொண்டு அளவுக்கு அதிகமாக பெண் ஒருவர் குடித்து இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!