கையை பிடித்து இழுத்த போலீசாருக்கு பளார் : அரசுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2024, 11:28 am
தெலுங்கானாவில் நடைபெற்ற கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சி அனைத்து தேர்தல் வாக்குறுதியை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் ஹைதராபாத்தில் உள்ள கோட்டி சௌரஸ்தாவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?
அவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசாரை அங்கு குவித்திருந்தனர். பெண் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசா ஊழியர்களை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்ற நிலையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்வக்கோளாறு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கையை பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார்.
இந்த நிலையில் பலவந்தமாக லாரியில் ஏற்றப்பட்ட ஆஷா ஊழியர் ஒருவர், தங்களை கையைப் பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்ற ஆன் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை பெண் போலீசார் பின்னர் தாக்கியது வேறு விஷயம்.