வீட்டு மொட்டை மாடியில் நடந்து சென்ற பெண்…. சட்டென வந்த மின்னல் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 6:49 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மோகன் பயோ கவர்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.

இன்று மாலை காஞ்சிபுரம் நகரில் பலத்த சூரைக்காற்றுடன் லேசான தூறல், இடி மற்றும் மின்னல் அவ்வப்போது ஏற்பட்டது. இளவரசி வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தபோது இவர் அருகே மின்னல் தாக்கியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இளவரசி மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.

அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மின்னல் தாக்கிய அறிகுறிகள் ஏதும் இளவரசியின் உடலில் காணப்படவில்லை என்றும் மின்னல் தாக்கிய அதிர்ச்சியிலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தாலுக்கா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!