விபத்தில் சிக்கி ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த இளைஞர் : இறந்து போன இளைஞருக்கு நண்பர்கள் செய்த இரத்த தானம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் விக்னேஷ் , இவர் தனது கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் விக்னேஷ் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
விபத்தில் காயமடைந்த செந்தில் அதிகபடியான இரத்தம் இழந்ததாலும், அவர் சிகிச்சைக்கு தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தால் செந்தில் உயிரிழந்தார்.
போதிய இரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த தங்களது நண்பனின் நினைவாகவும், இரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரிழந்த விக்னேஷ் நண்பர்கள் 60க்கும் மேற்ப்பட்டோர் கோட்டூர் பகுதியில் இரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நண்பனின் நினைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்தானம் வழங்கிய நண்பர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நண்பர்கள் வழங்கிய இரத்தம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.