சோதனை செய்ய வந்த பறக்கும் படையினரின் வாகன கண்ணாடி உடைத்த இளைஞரால் பரபரப்பு : விசாரணையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 9:47 pm

சோதனை செய்ய வந்த பறக்கும் படையினரின் வாகன கண்ணாடி உடைத்த நபரால் பரபரப்பு : விசாரணையில் பகீர்!

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு மயிலம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா மூன்று வாகனங்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திண்டிவனத்தில் காவேரிப்பாக்கம் அருகே நிலையான கண்காணிப்புக் குழு பொறுப்பாளர் விஜய் சங்கர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் வாகனத்தை தடுத்து நிறுத்தி முன்பக்க கண்ணாடியை தனது கையால் சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டிவனம் கிடங்கல் – 2 பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் விக்னேஷ்வர் (26) என்பதும், மது போதையில் பறக்கும் படையினரை வழிமறித்து தகராறு ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தேர்தல் பறக்கும் படை வாகனத்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ