காயமடைந்த யானையின் உயிரை காப்பாற்றிய இளைஞர் : பாசத்தால் காட்டு யானையை கட்டிப்போட்ட நெகிழ வைக்கும் காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 4:03 pm
Elephant Video - Updatenews360
Quick Share

கோவை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு காட்டு மாடுகள், புலிகள், மான்கள், மைல்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த சுங்கம் என்ற பகுதியில் இரண்டு வாரமாக காட்டு யானை ஒன்று தன் காலில் காயத்துடன் சுங்கம் பகுதியில் உள்ள ஆட்டங்கரையில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த புஷ்பா குருசாமி தம்பதியரின் மகன் பிரவீன் (வயது 22). இவர் அப்பகுதியில் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் ஆற்றில் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம் காலில் அடிபட்ட காட்டு யானைக்கு உணவு அளிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். இச்செயலால் காட்டு யானைக்கு பிரவீன் மீது ஓர் பாசமும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

பிறர் யானையிடம் நெருங்குவதை யானை விரும்பாத நிலையில் பிரவீனை மட்டும் தனக்கு உணவை வழங்க வழி விட்டது.

இதை அறிந்த கேரளா வனத்துறையினர் பிரவீனை வைத்து யானையை ஆற்றுப்பகுதியில் இருந்து நிலப்பகுதிக்கு கூட்டிவரப்பட்டு யானையின் காலிற்கு மருத்துவர்கள் உதவியோடு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https://vimeo.com/751616303

காட்டு யானை தன் வசிக்கும் காட்டை விட்டு மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மனிதர்களிடம் நம்பிக்கையுடன் பழகுவதை கண்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 368

    0

    0