பேய் படம் காட்டுவதாக கூறி சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற இளைஞர்.. இரவு நேரத்தில் நடந்த விபரீதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 7:52 pm

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 14-வயதான மகள் சனிக்கிழமை இரவு வீட்டருகே உள்ள புதிய வீட்டின் கிரஹ பிரவேச விழாவில் கலந்து கொள்வதற்காக தாயுடன் சென்றுள்ளார்

சிறுமி சக உறவுக்காற சிறுமிகளுடன் வீட்டை சுற்றி பார்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 25-வயதான வாலிபர் பிரசாந்த் என்பவர் அந்த சிறுமியை அழைத்து உனக்கு செல்போனில் பேய் படம் காட்டி தரட்டுமா என கேட்டுள்ளார்.

சிறுமியும் ஆர்வத்துடன் சரி என்று சொல்ல இருட்டில் தான் நன்றாக தெரியும் என கூறி சிறுமியை அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற பிரசாந்த் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி அலறி சத்தம் போடவே பிரசாந்த் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் உறவினர்கள் சிறுமியை மீட்டனர். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் வாலிபர் பிரசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வந்த நிலையில் அவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!