சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொலை செய்ய முயன்ற இளைஞர் : கழுத்தை அறுத்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan3 November 2022, 12:20 pm
சத்தியமங்கலம் அருகே காதல் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்ற இளைஞன் மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் முடுக்கன்துறை பகுதியை சேர்ந்த மாணவி ஸ்வேதா. சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவருக்கும் பவானிசாகர் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மான் என்று அழைக்கப்படும் நவீன் என்ற இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் ஒரு வருடங்களுக்கு முன்பு பள்ளியில் பயின்று வரும் தன்னுடைய மகளை காதல் என்ற பெயரில் தொல்லை செய்து வருவதாக சுவேதாவின் தாய் பவானிசாகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் நவீன் என்பவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை அடுத்து சிறையில் இருந்து வெளிவந்த பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நவீன் மேலும் மேலும் பள்ளி செல்லும் மாணவி சுவேதாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த ஸ்வேதாவை பின் தொடர்ந்து வந்த நவீன் கூலிஸ் செல்லும் சாலையில் ஸ்வேதாவை துரத்தி சென்று பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார்.
சுவேதாவின் அலறல் சுத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஸ்வேதாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.