பாட்டு பாடும் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற இளைஞர் : செல்போனை தூக்கி வீசிய சீமான்!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2024, 8:44 am
பாட்டு பாடும் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற இளைஞர் : செல்போனை தூக்கி வீசிய சீமான்!!
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மறைந்த வீரப்பனின் மகளும், வித்யா ராணியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசி முடித்துவிட்டு மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாடல் ஒன்றை சீமான் பாடினார். அவர் பாடிக்கொண்டிருந்த போது இடையில் நுழைந்த வாலிபர் ஒருவர் அவர் அருகில் நின்று மொபைலில் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென சுதாரித்து கொண்ட சீமான் அவரை முறைத்ததோடு, அண்ணா ஒரே ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடுப்பான சீமான் மொபைலை கோபத்துடன் தூக்கி எறிந்தார். மேலும் முட்டாப்பய இவனுக்கு இவன் பிரச்சனை என திட்டியவரு பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பினார்.