கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் : ஸ்கெட்ச் போட்ட கணவன்.. அதிர வைத்த கொலை சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 9:10 am

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர்
சுதா சந்தர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஆவடியில் இருந்து லட்சுமிபுரம் வந்து இரண்டு மாதம் ஆகிறது இந்தநிலையில் சுதாசுந்தர் மோட்டார் சைக்கிளில் இளம் பெண் ராகினி என்பவருடன் நேற்று புழல் அடுத்த விநாயகபுரம் வில்லிவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது
கும்பல் ஒன்று அவரை வழி மடக்கி மறைத்து வைத்திருக்க கத்தி எடுத்து தலை கழுத்து உடல் முழுவதும் சரமரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திலேயே அவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை சம்பவம் கள்ளக்காதலால் நடந்ததா அல்லது முன்விரோதமாக நடந்ததா மோட்டார் சைக்கிள் வந்த பெண் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வந்த நிலையில் திடுக்கிடும் தகவல் காத்திருந்தது.

இருசக்கர வாகனத்தில் உடன் வந்த பெண் ராகினி 20 என்பவரிடம் விசாரணை மேற்கொண்டது. ஆவடியில் தனது குடும்பத்தினருடன் ராகினி வசித்த போது அங்கு சுதா சந்தருக்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது பள்ளியில் படித்தபோது காதல் இருந்ததால் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்து ராகினியை வசந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கிடையே உள்ள கள்ளத்தொடர்பு வசந்தத்திற்கு தெரிய வந்ததால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ராகினி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் லட்சுமிபுரம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ராகினியின் கள்ளக்காதல் தொடர்பு காரணமாக தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் கணவர் வசந்தை பிரிந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உடன் ராகினி தனது கள்ளக்காதலன் சுதாசந்தர் உடன் வசித்து வந்ததால் ஆத்திரத்தில் ராகினியின் கணவர் வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், ராகினியின் குடும்பத்தினர் சேர்ந்து தனது கணவரை கொன்றிருக்கலாம் என புழல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வசந்த் மற்றும் ராகினியின் உறவுக்காரர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராகினி தனது கணவர் வசந்தை பிரிந்து கள்ளக்காதலுடன் வசித்து வந்ததால் ஆத்திரத்தில் அவரை திட்டமிட்டு கொன்று இருக்கலாம் என்பதால் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை ‌ தீவிரமாக தேடி வருகின்றனர்..

சுதா சந்தர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான முழு பின்னணியும் கொலை நடந்த முழு விவரமும் தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!