பரபரப்பான சாலையின் நடுவே ஓடி வந்த இளம் பெண்.. வாகன ஓட்டிகளை மிரள வைத்து அட்டகாசம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 5:26 pm

பரபரப்பான சாலையின் நடுவே ஓடி வந்த இளம் பெண்.. வாகன ஓட்டிகளை மிரள வைத்து அட்டகாசம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி வாகன ஒட்டிகளுக்கு வாகனங்களை வழிமறித்து போக்குவரத்துக் காவலர் செய்யும் வேலைகளை அனைத்தும் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தார் . அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களுக்கு சல்யூட் அடித்து வாகன ஓட்டிகளை வரவேற்றார்.

தாராபுரம் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் உதவியுடன் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்ணை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோதிகா வயது 25 என்பதும் தெரிய வந்தது. இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று காலையில் பழனியில் இருந்து தாராபுரத்திற்கு வந்து இதுபோன்று அட்ராசிட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!