ரயிலில் கூட்ட நெரிசலால் கால்களை இழந்த இளைஞர் : துடிதுடிக்க உயிரிழந்த பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 5:07 pm

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன் 25. இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

காலை வழக்கம் வேலைக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் புறநகர் ரயிலில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறினார்.

இதையும் படியுங்க: தினம் தினம் டார்ச்சர்..மனைவியின் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்த கணவன்..!!

கூட்ட நெரிசல் இருந்தால் படியருகே நின்றிருந்தார். ரயில் திருவாலங்காடு ரயில் நிலையம் கடந்தபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர் கால்கள் துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The youth lost his footing and fell on the train

இதுகுறித்து வழக்கு பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

  • Actor Bala helps actress Bindhu Ghosh பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!