ஆந்திராவை சுற்றி பார்க்க சென்ற தமிழக இளைஞர்கள்… நொடியில் நடந்த துயரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 4:56 pm

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த யுவராஜ்( 21), விஷ்வா (18) ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் ஊர் சுற்றி பார்ப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தனர். தரகஷ்த்து கிராம வழியாக சென்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அங்குள்ள விநாயகர் கோவில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த வரதயாபாளையம் போலீசார் இரண்டு பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 502

    0

    0