20 வருஷமா ரோடு சரியில்லை.. திமுக வேட்பாளரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர் : பிரசாரத்தை முடித்து தங்கத்தமிழ்செல்வன் ஓட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 9:29 am

20 வருஷமா ரோடு சரியில்லை.. திமுக வேட்பாளரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர் : பிரசாரத்தை முடித்து தங்கத்தமிழ்செல்வன் ஓட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 28 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

இதில் மாலையில் எ.புதுப்பட்டி ஊராட்சி, கீழவடகரை ஊராட்சி, வடுகபட்டி பேரூராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

இறுதியாக கீழவடகரை ஊராட்சியின் அழகர்சாமிபுரம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது, அழகர்சாமிபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞர் தங்களது பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தரவில்லை என கூறி பரப்புரையின் போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

அப்பொழுது தங்கதமிழ்செல்வன் பேச்சை நிறுத்தி தம்பி நான் காலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன், தொண்டை வலிக்கிறது, கொஞ்சம் அமைதியாக இரு, என்று கூறி தனது பரப்புரையைத் தொடர்ந்தார்.

இருந்த போதும் அந்த இளைஞர் மீண்டும் சாலை வசதி குறித்து கேள்வி கேட்டதால் பரப்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டு பரப்புரை வாகனத்தில் இருந்து கீழ் இறங்கி அவரது காரில் கிளம்பிச் சென்றார்.

இதனிடையே சாலை வசதி கோரி கேள்வி கேட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இளைஞரை திமுக நிர்வாகிகளிடமிருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

இப்ப பிரச்சனை குறித்து விசாரணை செய்ததில் இளைஞர் கூறிய அழகர்சாமி புறம் அண்ணா நகர் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முற்பட்ட பொழுது, நகராட்சிக்கு சொந்தமான பகுதி என கூறி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தடுத்ததாக கூறப்படும் நிலையில், பிரச்சாரத்தின் போது இளைஞர் கேள்வி எழுப்பியதாக தெரியவந்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ