திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
இவர் சுள்ளான் என்பவரை 2020 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இன்று 07.07.24 இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற நிலையில் நேற்றைய முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மேலும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.