கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பிய இளைஞர்… வழிமறித்த கும்பல் : காட்டுக்குள் நடந்த கொடூர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 6:42 pm

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பிய இளைஞர்… வழிமறித்த கும்பல் : காட்டுக்குள் நடந்த கொடூர சம்பவம்!!

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தபார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து வடிவேல் முருகன் பைக்கை அங்கேயே போட்டுவி்ட்டு காட்டிற்குள் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக இந்த காெலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 283

    0

    0