பாம்பை வாயில் கடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்.. 3 இளைஞர்கள் கைது ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 4:28 pm

ராணிப்பேட்டை ; பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33), சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அதோடு நிற்காமல் பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

https://player.vimeo.com/video/814928619?h=3131afc688&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்