தாயை பற்றி தவறாக பேசியதால் கொடூர கொலை.. அலுவலகத்தில் புகுந்து கொலை செய்த இளைஞர் : Permission தராததால் விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 November 2022, 10:14 pm
சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர்.
விவேக் எழும்பூர் பகுதியிலி உள்ள ஹாத்வே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று காலை அலுவலகத்தில் பணியில் இருந்த விவேக்கை கத்தியுடன் நுழைந்த மர்மநபர் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அவர்களையும் கத்தியால் குத்தியதில் இருவர் காயமடைந்தனர். மாடி வழியாக தப்பி சென்றார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, ஒரு கட்டிடத்தின் மாடியில் பதுங்கி இருந்த கொலையாளியை அவரது உறவினர் ஒருவரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்துவது போல அழைத்து சுற்றிவளைத்தனர்.
பின்னர் அவனிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், விசாரணையில் அவன் பைக்ரேசர் சந்தோஷ் என்பதும், கடந்த 4 மாதங்களாக விவேக்கிற்கு கீழ் நிலை ஊழியராக பணியாற்றியதும் தெரியவந்தது.
மேலம், கடந்த இரண்மு வாரங்களுக்கு முன்பு பைக் ரேஸ் மீதுள்ள ஆர்வம் காரணமாக சீக்கிரமாக வெளியே செல்ல வேண்டும் என விவேக்கிடம் சந்தோஷ் அனுமதி கேட்டுள்ளார்.
பணி முடிக்காமல் செல்ல வேண்டாம் என விவேக் எச்சரித்துள்ளார். மேலம் ஆபாசமாக சந்தோஷின் தாயையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு,சக ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
தாயை திட்டியைதை தாங்காத சந்தோஷ், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு வந்த போது, விவேக்கிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விவேக்கின் கழுத்தில் குத்தி உள்ளார். மேலும் தப்பிய விவேக்கை துரத்தி சென்று கொலை செய்துள்ளார் சந்தோஷ். மேலும் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.