ரயில் எஞ்சின் மீது ஏறிய இளைஞர் மீது பாய்ந்த மின்சாரம் : இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த துயரம்.. ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan11 September 2022, 1:53 pm
தியாகி இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வந்த இளைஞர் ஒருவர் ரெயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் இளைஞரை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைத்தனர்.
பரமக்குடி குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வந்த தேவகோட்டை சகோதரர்
— Indhiran_007 (@Indhiran_007) September 11, 2022
பரமக்குடி ரயில் எஞ்சின் மீது கொடியுடன் ஏறிய போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கவலைக்கிடம். ஆபத்தான நிலையில்….
அமைதியாக சென்று வழிபட்டு வரவும் ? pic.twitter.com/H3NxKKhyta
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.