Categories: தமிழகம்

15 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. அறையில் தங்கவைத்து பல நாட்களாக பலாத்காரம் : 40 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார்.

பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேறு ஊருக்கு சென்றனர்.உடனே சகாய அஜித் சிறுமியை அங்கிருந்து கடத்தி வந்து தனது வீட்டின் மாடியில் அடைத்து வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு சிறுமியை அடித்து உதைத்ததோடு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த சகாய அஜித்தின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த சிறுமியை காப்பாற்றி அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி வழக்கு பதிவு செய்து சகாய அஜித்தை கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா சகாய அஜித்தை குற்றவாளி என அறிவித்தார்,

அப்போது சிறுமியை கடத்த்தியது, வீட்டுக்குள் அடைத்து வைத்தல், கொலை முயற்சி,போக்சோ சட்டம், பெண் படும் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 33,000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 6 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து : தவெக நிர்வாகி பரபரப்பு வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின்…

28 minutes ago

ஜெயலலிதா கனவை பார்க்கப் போகிறாரா இபிஎஸ்? டெல்லி விசிட்டின் பரபரப்பு அரசியல் பின்னணி!

2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் அரசியல்…

33 minutes ago

9 மாத திருமண வாழ்க்கைக்கு விடை என்ன? கணவர் அதிர்ச்சி பதில்!

திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி: திருச்சி மாவட்டம்,…

1 hour ago

ரசிகரிடம் தனது போன் நம்பரை கொடுத்த விக்ரம்.. அந்த மனசுதான் சார்.. வைரலாகும் வீடியோ!

கடும் உழைப்புக்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் பல…

2 hours ago

ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 185…

2 hours ago

’கவர்னர்’ பீடி.. ’அப்பா’ சொன்னார்.. ஆளுநர் மேடையில் பார்த்திபன் ‘நச்’ பேச்சு!

எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். சென்னை: சென்னை,…

3 hours ago

This website uses cookies.